முன்னெச்சரிக்கை நடவடிக்கை: லீ ஆ மூய் முதியோர் இல்லத்தில் 90 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: லீ ஆ மூய் முதியோர் இல்லத்தில் 90 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை

1 mins read
f2f60d1d-d09c-4375-8039-2f0fcae555b6
அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த விடுதிக்குப் பார்வையாளர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

சிலாட் அவென்யூவில் உள்ள லீ ஆ மூய் முதியோர் இல்லவாசிகள், ஊழியர்கள் என மொத்தம் 90 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த இல்லத்தின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த இல்லத்தில் முன்பு பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிலிப்பீன்சில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இல்லவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த விடுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்