இந்தியா, மலேசியாவிலிருந்து வந்த 7 பேருக்கு கொவிட்-19

இந்தியா, மலேசியாவிலிருந்து வந்த 7 பேருக்கு கொவிட்-19

1 mins read
3f33ab3e-2107-41f8-929a-8998c082d6f0
3 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 31) சுகாதார அமைச்சு அறிவித்த 41 கிருமித்தொற்று சம்பவங்களில் 3 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை. அவர்கள் மூவரும் வேலை அனுமதிச் சீட்டு/அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் இவருக்குத் தொடர்பு இல்லை எனவும், தொடர்புகளின் தடமறியும் பணி தொடர்வதாகவும் கூறப்பட்டது.

இந்தியா, மலேசியாவிலிருந்து திரும்பிய 2 சிங்கப்பூரர்கள், 4 நிரந்தரவாசிகள் உட்பட 7 பேர், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டு, பின் கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

மற்றொரு நபர், இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 19ஆம் தேதி இங்கு வந்தவர்; வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் அவர் இங்கு பணிபுரிபவர்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்