சிங்கப்பூர்-புருணை அத்தியாவசிய பயணங்களுக்கு இணக்கம்

சிங்கப்பூரும் புருணையும் இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய விமானப் பயணங்களுக்கு சில நிபந்தனைகளுடன் இணக்கம் கண்டுள்ளன.

பயணத்திற்கு முன்னதாக பயணிகள் கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அத்துடன், தாங்கள் செல்லும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அங்கு சளி அல்லது எச்சில் மாதிரிகளைக் கொண்ட பரிசோதனையைப் பயணிகள் செய்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்பான முறையில் இந்த அத்தியாவசியப் பயணங்களைத் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருணையில் இருந்து சிங்கப்பூர் வரவிரும்பும் பயணிகள், முதலில் சிங்கப்பூர் அரசாங்க முகவையின் மூலம் பாதுகாப்பு அனுமதிச் சீட்டுக்கு (சேஃப் டிராவல் பாஸ்) விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனுமதிச் சீட்டைப் பெற்றவர்கள் பின்னர் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட விசா, கொவிட்-19 நெருக்கடியால் தடை செய்யப்பட்டிருந்து. அவர்கள் இப்போது பாதுகாப்பு அனுமதிச் சீட்டை பெற்றிருந்தால் அந்த விசா செல்லுபடியாகும். அவர்கள் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

புருணையில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள் அங்கு குறைந்தது 14 நாட்கள் தங்கி இருந்திருக்க வேண்டும்.

பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் சளி, எச்சில் மாதிரி பரிசோதனை செய்து கொவிட்-19 தொற்று பாதிப்பு இல்லையென புருணை அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதை பயணிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து புருணை செல்பவர்களும் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொவிட்-19 சோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழ், விசா ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

புருணை விமான நிலையத்திற்குச் சென்று சேரும் பயணிகள், உறுதிசெய்யப்பட்ட தங்கும் விடுதிகளுக்குச் செல்வதற்கான வாகனங்களை அந்நாட்டு அரசாங்க முகவை ஏற்பாடு செய்து வைத்து இருக்கும்.

கொவிட்-19 பரிசோதனை முடிவு வெளிவரும் வரை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே இருக்க வேண்டும். பரிசோதனை, தங்கும் விடுதி போன்றவற்றுக்கான செலவுகளைப் பயணிகள் ஏற்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!