கொவிட்-19ஐ சிங்கப்பூர் கையாண்டது பற்றி இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ உரை

கொவிட்-19ஐ சிங்கப்பூர் கையாண்டது பற்றி இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ உரை

1 mins read
cb345914-3171-4203-a4b9-39cbc742a6f6
கொவிட்-19 கொள்ளைநோயை சிங்கப்பூர் கையாண்டது, இந்தச் சூழலுக்குப் பிறகான வாழ்க்கைக்குத் தயாராவது ஆகியன குறித்து பிரதமர் லீ சியன் லூங் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கொள்ளைநோயை சிங்கப்பூர் கையாண்டது, இந்தச் சூழலுக்குப் பிறகான வாழ்க்கைக்குத் தயாராவது ஆகியன குறித்து பிரதமர் லீ சியன் லூங் இன்று (செப்டம்பர் 2) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.

பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த உரையை நேரலையாகக் காணலாம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிஎன்ஏ இணையப் பக்கங்களிலும் அதனைக் காணலாம்.

இந்த ஆண்டு கொவிட்-19 சூழல் காரணமாக தேசிய தின பேரணி உரை இடம்பெறாது எனவும், அதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் முக்கிய உரையாற்றப் போவதாகவும் திரு லீ கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்