சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 2) நண்பகல் நிலவரப்படி புதிதாக 49 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,901 ஆகியுள்ளது.
இன்று உள்ளூர் சமூகத்தில் மூவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.


