'பூகிஸ் ஜங்ஷன், பாசிர் ரிஸ் பகுதிகளில் உணவகங்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்'

'பூகிஸ் ஜங்ஷன், பாசிர் ரிஸ் பகுதிகளில் உணவகங்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்'

1 mins read
ca051d2b-41b9-4f71-953c-f00785a862b5
'பூகிஸ் ஜங்ஷன், ஆர்ச்சர்ட் சென்ட்ரல் போன்ற இடங்களில் உள்ள உணவகங்களுக்கு கொரோனா தொற்றியவர்கள் சென்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பூகிஸ் ஜங்ஷனில் இருக்கும் ஸ்டார்பக்ஸ், ஷியாவ் லாங் கான் ஹாட்பாட் உணவகம், ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் இருக்கும் டா லாங் யி ஹாட்பாட் உணவகம், 35 கிரெத்தா ஆயர் ரோட்டில் இருக்கும் டொன் டா பக் உணவகம், பாசிர் ரிஸ் விளையாட்டு மையத்தில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகம், டெம்பள் ஸ்திரீட்டில் இருக்கும் மெய் ஹியோங் யுவென் டிசர்ட் உணவகம் போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 1) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்