கவனிக்கப்பட வேண்டிய அம்சம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்

கவனிக்கப்பட வேண்டிய அம்சம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்

1 mins read
43518eb2-9334-4b38-a58a-9796f5d0bf80
மேல்வர்க்க உணர்வுகளையும் சமூக முன்னேற்றக் குறைபாடுகளையும் முறியடிக்க வேண்டிய அவசரத் தேவை சிங்கப்பூருக்கு இருப்பதாகவும் அவ்விரண்டுமே நாடு எதிர்நோக்கும் இடர் மிகுந்த பிரச்சினைகள் என்றும் பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஹி டிங் ரூ தெரிவித்துள்ளார். படம்: GOV.SG -

மேல்வர்க்க உணர்வுகளையும் சமூக முன்னேற்றக் குறைபாடுகளையும் முறியடிக்க வேண்டிய அவசரத் தேவை சிங்கப்பூருக்கு இருப்பதாகவும் அவ்விரண்டுமே நாடு எதிர்நோக்கும் இடர் மிகுந்த பிரச்சினைகள் என்றும் பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஹி டிங் ரூ தெரிவித்துள்ளார்.

அதிபர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்முறை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார் அவர்.

வசதிகுறைந்த பின்னணியைக் கொண்ட இளம் தலைமுறையினரை வழிநடத்துவதும் தீர்வுகாணப்பட வேண்டிய ஓர் அம்சம் என்றார்.

மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் குறைகளைக் கேட் டறிந்து, வேலை தேடுவதற்கும் அதற்கு விண்ணப்பம் செய்வதற்கும் வழிகாட்ட வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டார் கேம்பிரிட்ஜில் பயின்ற வழக்கறிஞரான திருவாட்டி ஹி.

தமது பல்கலைக்கழக அனுபவங்களை அவர் மன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.

வசதி குறைந்த மாணவர்களிடம் காணப்படும் நம்பிக்கை குறைவு அவர்களைப் பின்தங்கச் செய்ததாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் நீடித்த தன்மை யின் அவசியம் குறித்து கூறுகையில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கடந்து சமூக அளவிலும் பொருளியல் ரீதியாகவும் சிங்கப்பூர் நீடித்திருக்க வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்