கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் நெக்ஸ், சன்டெக் சிட்டி, விவோ சிட்டி

கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் நெக்ஸ், சன்டெக் சிட்டி, விவோ சிட்டி

1 mins read
46e6c746-b58a-4efe-9c2e-8c0d0d244de3
படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

நெக்ஸ், விவோசிட்டி, சன்டெக் சிட்டி போன்ற பல கடைத்தொகுதிகளுக்கு, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 3) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பிராஸ் பாஷா காம்ப்ளெக்ஸ், கேலாங் செராய் மலாய் சந்தை மற்றும் உணவு நிலையம், உட்லண்ட்ஸ் சிவிக் சென்டர் ஆகிய இடங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்