3 ஊழியர் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று குழுமங்கள்; 29 ஊழியர்களுக்கு தொற்று

3 ஊழியர் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று குழுமங்கள்; 29 ஊழியர்களுக்கு தொற்று

1 mins read
c24df167-06c1-4860-99c6-4936567c7e3e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் மூன்று ஊழியர் விடுதிகளில் கிருமித்தொற்று குழுமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோச்ரேன் லாட்ஜ் I, மண்டாய் லாட்ஜ் I, துவாஸ் சவுத் ஊழியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் முறையே 9, 17, 11 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று உள்ளூர் சமூகத்தில் 3 சம்பவங்கள் பதிவாகின. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தடமறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மூவருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

கிருமித்தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிங்கப்பூரர் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அவர் மலேசியாவில் இருந்தபோது அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்று கூறப்பட்டது. சிங்கப்பூருக்கு வந்த பிறகு அவர் தனிமைப்படுத்தும் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய பிறகு, இங்கு தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கும் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

பொங்கோலில் உள்ள வாட்டர்வே பாயின்ட், சிலேத்தார் மால் ஆகிய இடங்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றதாக சுகாதார அமைச்சின் நேற்றைய அறிக்கை தெரிவித்தது.

நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்ட 34 பேரில் 29 பேர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள். அவர்களில் 14 பேர் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்; எஞ்சிய 15 பேர் இரு வாரங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளின் மூலம் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்