சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 8) நண்பகல் நிலவரப்படி புதிதாக 47 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,091 ஆகியுள்ளது.
இன்று மீண்டும் உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் கிருமித்தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்.

