இந்தியாவிலிருந்து திரும்பிய இருவருக்கு கொவிட்-19

இந்தியாவிலிருந்து திரும்பிய இருவருக்கு கொவிட்-19

1 mins read
8c501767-0a3a-4539-8630-bc9ea615202b
சாங்கி விமான நிலையம். கோப்புப்படம்; ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நேற்று சிங்கப்பூரில் 22 கொவிட்-19 சம்பவங்கள் மட்டுமே பதிவாகின. அவற்றுள் ஒன்று மட்டுமே உள்ளூர் சமூகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தடமறியும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுமானம், கடற்துறை, பதனீடு துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளில், பங்ளாதேஷைச் சேர்ந்த 35 வயது ஊழியருக்கு கொவிட்-19 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டதில் மூவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 26ஆம் தேதி வந்தவர்கள். ஒருவர் நிரந்தரவாசி, மற்றவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

மூன்றாம் நபர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2ஆகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 3 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 2 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 1 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்