சிங்கப்பூரில் 13,000 ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப தடை

சிங்கப்பூரில் 13,000 ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப தடை

1 mins read
2fd84614-a885-42ce-aca3-d7a892df585b
அந்த ஊழியர்களைப் பரிசோதனைக்குப் பதிவு செய்ய போதிய இடங்கள் இருந்தபோதும் அவர்களது நிறுவனங்கள் பரிசோதனைக்கான பதிவுகளைச் செய்யவில்லை என்று கூறப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பரிசோதனையைக் கொடுக்கப்பட்ட தேதிக்குள் செய்துகொள்ளாத காரணத்தால் கிட்டத்தட்ட 13,000 ஊழியர்களால் வேலைக்குத் திரும்ப முடியவில்லை.

ஊழியர்களின் 'எக்செஸ்கோட்' (AccessCode) சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பரிசோதனைக்குப் பின்னரே பச்சை நிறத்திற்கு மாறி வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஊழியர்களை இம்மாதம் 5ஆம் தேதிக்குள் பரிசோதனைக்கு அனுப்ப முன்பதிவு செய்திடுமாறு மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், பொருளியல் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை முதலாளிகளுக்கு நினைவுறுத்தியிருந்தன.

குறிப்புச் சொற்கள்