சிங்கப்பூரில் புதிதாக 75 பேருக்கு தொற்று; 14 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்

சிங்கப்பூரில் புதிதாக 75 பேருக்கு தொற்று; 14 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்

1 mins read
0cf503f7-25ea-463e-82d0-13795611f6fe
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 9) நண்பகல் நிலவரப்படி புதிதாக 75 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,166 ஆகியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இன்று அறிவிக்கப்பட்டதில் எஞ்சிய 60 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள். அவர்களில் 31 பேர் வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர்கள்; தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

மற்ற 29 பேருக்கு, விடுதிகளில் தங்கியுள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் பரிசோதனைகளின்போது கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்