கொவிட்-19 சூழலில் பாதுகாப்பு இடைவெளி கருதி 10 பேருக்கு மேல் கூட முடியாது என்ற கட்டுப்பாடு இங்கு விதிக்கப்பட்டும், இவ்வாண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று, குண்டர் கும்பல் ஒன்றைச் சேர்ந்த 13 பேர் இறுதிச் சடங்கு கண்விழிப்பில் கூடியதுடன் தங்களது கும்பலின் பெயர் தொடர்பான சுலோகங்களையும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு இடைவெளியை மீறியதன் தொடர்பிலும் சட்டவிரோத கும்பலில் ஓர் உறுப்பினராக இருப்பதன் தொடர்பிலும் 12 பேர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
இருவர் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று அறியப்படுகிறது.
கும்பலின் 13வது நபரான 34 வயது ஓங் டெக் வெய் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளதால், இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

