கொவிட்-19 நோயாளிகளுக்காக புதுப்பிக்கப்பட்ட 51 வாகனங்கள்

கொவிட்-19 நோயாளிகளுக்காக புதுப்பிக்கப்பட்ட 51 வாகனங்கள்

1 mins read
04c99d4d-cf7f-42c4-ab4d-b5074bbe94f3
பாதுகாப்பை உறுதிசெய்ய வாகனங்களில் ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: எஸ்எம்ஆர்டி -

கொவிட்-19 நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பயணம் செய்வதற்காக 51 பேருந்துகளும் வேன்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பரிசோதனை மையங்கள், சமூகப் பராமரிப்பு வளாகங்கள் ஆகியவற்றுக்குப் பயணிகளைக் கொண்டு செல்ல 'கொமெட்' என்று அழைக்கப்படும் இவ்வகை வாகனம் உதவுகிறது.

கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடும் வகையில் தெமாசெக் அறநிறுவனம் இத்திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. இதற்கு 'எஸ்எம்ஆர்டி கார்பரேஷன்', 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள் சிலவும் கைகொடுத்துள்ளன.

பயணிகள் அமரும் இடத்தில் எதிர்மறை அழுத்த செயல்முறை பொருத்தப்பட்டுள்ளதால் வாகனத்தில் காற்று சுத்திகரிப்பும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்