சிங்கப்பூரில் மேலும் 63 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் மேலும் 63 பேருக்கு கொவிட்-19

1 mins read
1c846aa1-a364-4de9-9298-c391e96fe4f3
படம் :ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 10) நண்பகல் நிலவரப்படி புதிதாக 63 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,229 ஆகியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மற்றவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்