21ஆம் தேதி முதல் இரு இலவச முகக்கவசங்கள்

21ஆம் தேதி முதல் இரு இலவச முகக்கவசங்கள்

1 mins read
1b9e1389-7d38-46f7-9d78-a41fc8f9825c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தலா இரு இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும்.

அதை அவர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தெமாசெக் அறநிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுகிறது.

இல்லப் பணிப்பெண்கள், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இச்சலுகை நீட்டிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு, சிறுவருக்கான முகக்கவசம் கொடுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்