சுடச் சுடச் செய்திகள்

‘டிக்டாக்’ உரிமையாளர் சிங்கப்பூரில் பில்லியன் கணக்கில் முதலீடு

பிரபல ‘டிக்டாக்’ காணொளி பகிரும் செயலியின் உரிமையாளரான ‘பைட்டான்ஸ்’ நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கு பில்லியன் கணக்கில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அத்துடன் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் பெய்ஜிங் மாநிலத்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பைட்டான்ஸ்’, அதன் அனைத்துலக விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இவ்வாறு முதலீடு செய்யவுள்ளதாக ரகசியத்தன்மை கருதி பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் குறிப்பிட்டனர்.

மின்னிலக்க வங்கி ஒன்றைச் செயல்படுத்தும் உரிமத்துக்காக நிறுவனம் இங்கு விண்ணப்பமும் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப்பின் நிர்வாகத்தின் அழுத்தத்தால் அமெரிக்காவில் அதன் டிக்டாக் செயல்பாடுகளை விற்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் இம்முதலீடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் வந்துள்ளது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon