துவாசில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஒன்றில் புதிய கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்று முன்தின இரவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
எண் 80 துவாஸ் சவுத் பொலிவார்ட்டில் உள்ள 'எஸ்சிஎம் துவாஸ் லாட்ஜ்' எனும் அந்த விடுதியில் புதிதாக இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக கிருமித்தொற்று கண்ட மூவருடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது.

