சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,406ஆக உள்ளது.
சமூக அளவில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. அவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த எட்டுப் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


