'கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேருக்கு அறிகுறிகள் இல்லை'

2 mins read
a06f4a2d-ebac-4b7d-92e9-29fcf1972e42
நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 28 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். அவர்களில் 16 பேருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பு இருந்தது. கிருமிப் பரவலைத் தடுக்க அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேருக்கு கிருமித்தொற்று அறிகுறி எதுவும் தென்படவில்லை.

நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 10 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், ஐவர் நிரந்தரவாசிகள். கடந்த மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் இந்தியாவிலிருந்து அவர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த மற்ற இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் ஜெர்மனி மற்றும் பிலிப்பீன்சில் இருந்து அவர்கள் இங்கு வந்தனர்.

எஞ்சிய ஒருவர் குறுகியகால அனுமதி அட்டை வைத்திருப்பவர். இம்மாதம் 5ஆம் தேதி இந்தியாவிலிருந்து அவர் சிங்கப்பூருக்கு வந்தார்.

சமூக அளவில் நால்வருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் நிரந்தரவாசி. மற்றொருவர் வேலை அனுமதி அட்டைதாரர். எஞ்சிய இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

அந்த நால்வருக்கும் கிருமித்தொற்று அறிகுறி எதுவும் தென்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 28 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். அவர்களில் 16 பேருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பு இருந்தது. கிருமிப் பரவலைத் தடுக்க அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனை நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எஞ்சிய 12 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்