கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் சாங்கி விமான நிலைய முனையம் 3 உட்பட புதிய இடங்கள்

வாட்டர்வே பாயின்ட், வெஸ்ட் மால், குவீன்ஸ்வே ஷாப்பிங் சென்டர், லியட் டவர்சில் உள்ள ஷேக் ஷாக் போன்ற இடங்களுக்கு, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்  (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்) கடந்த மாதம் 25 முதல் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 14) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சாங்கி முனையம் 3ல் உள்ள 4Fingers Crispy Chicken கடையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. 

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon