இந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்கு கொவிட்-19

இந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்கு கொவிட்-19

1 mins read
3c79522c-dc09-41c5-88b6-fff4cd222dac
மாதிரிப்படம்: சிஎம்ஜி -

சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 15) அறிவிக்கப்பட்ட 34 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

அவர்களில் இருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி, இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போர், இருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை உடையவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சமூக அளவில் நேற்று யாருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.

நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 28 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். அவர்களில் 13 பேருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பு இருந்தது. கிருமிப் பரவலைத் தடுக்க அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனை நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எஞ்சிய 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 1 ஆக குறைந்துள்ளது.அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்