இந்தியாவிலிருந்து திரும்பிய 2 வயது சிறுவனுக்கு கொவிட்-19

இந்தியாவிலிருந்து திரும்பிய 2 வயது சிறுவனுக்கு கொவிட்-19

2 mins read
7b92b14f-2c19-4ed5-a296-a33882cd2c53
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 16) அறிவிக்கப்பட்ட 27 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 2 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

அவர்களில் ஒருவர் 50 வயதான சிங்கப்பூர் மாது. மற்றவர் 2 வயது இந்தியச் சிறுவன். அந்தச் சிறுவனுக்கு இங்கு நீண்ட கால வருகை அனுமதி உள்ளது.

இவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சமூக அளவில் நேற்று இருவருக்கு கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 23 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர்.

தொடக்கத்தில் கிருமித்தொற்று இருப்பதாகக் கூறப்பட்ட நபர் ஒருவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது அடுத்த இரண்டு பரிசோதனைகளில் தெரிய வந்ததையடுத்து, கிருமித்தொற்று மொத்த எண்ணிக்கையிலிருந்து ஒன்று குறைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 1ஐ விட குறைந்துள்ளது.அதற்கு முந்தைய வாரத்தில் அது 1 ஆக இருந்தது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 30 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 944,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்