சுடச் சுடச் செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடுகள் தொடர்பான மாற்றங்கள்

புரட்டாசி மாதம் பிறந்து விட்டது. பெருமாள் கோயில்களில் புரட்டாசி வாரம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள்  இம்மாதம் முழுவதும் நடைபெறும்.

அந்த வகையில், சிங்கப்பூரின் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கொயிலிலும் இன்று (செப்டம்பர் 17) முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

செப்டம்பர் 19, 26, அக்டோபர் 3, 10 ஆகிய தேதிகளில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவமும் நடைபெறும்.

ஆனால், கொவிட்-19 சூழல் காரணமாக இவ்வாண்டு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சில முக்கிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியம் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 

புரட்டாசி மாதம் முழுவதும்:
ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 முதல் 11.45 மணி வரையிலும் மாலை 6.00 முதல் இரவு 8.45 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் 12.45 மணி வரையிலும் மாலை 5.45 முதல் இரவு 9.15 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

எந்த ஒரு நேரத்திலும் கோயிலுக்குள் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரபாதம், உச்சிகால பூசை, ஸ்ரீ விஷ்ணு ஹோமம், ஏகாந்த சேவை ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட அளவிலான முன்பதிவுகள் உள்ளன. இந்த வைபவங்களில் ஒவ்வொரு முன்பதிவுக்கும் அதிகபட்சம் ஐவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் (காலை 6 மணி), ஏகாந்த சேவை (இரவு 9.30 மணி) ஆகியவற்றை இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஃபேஸ்புக், யூடியூப் சேனல்களில் காணலாம்.
https://www.facebook.com/hinduendowmentsboard
https://www.youtube.com/hinduendowmentsboard

ஸ்ரீ வெங்கடேஸ்வர சஹஸ்ரநாம அர்ச்சனை நான்காவது புரட்டாசி சனிக்கிழமை, அதாவது அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும். பக்தர்களின் சார்பில் அர்ச்சகர்கள் சங்கல்பம் செய்வர். அன்று மாலை 5.30 மணி முதல் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப்பக்கத்தில் (www.heb.org.sg) நேரலையாக ஒளிபரப்பப்படும். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் www.sspt.org.sg என்ற இணையப்பக்கம் வழியாக பதிவு செய்யலாம்; அல்லது கோயில் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான, ஏற்கெனவே பொட்டலமிடப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு (ஒருவருக்கு ஒன்று வீதம்) வழங்கப்படும். கோயிலின் வெளியேறு வாயிலில் அதனைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு சென்று உண்ணலாம்.

மதிய உணவு பிரசாதம் காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் இரவு உணவு பிரசாதம் மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் விநியோகிக்கப்படும்.

சிராங்கூன் ரோட்டில் இருக்கும் நுழைவாயில் 1 (Gate 1) வழியாக கோயிலுக்குள் செல்லலாம். வெளியேறு வாயிலில் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் மட்டும் வாங்கச் செல்வோர் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் நுழைவாயில் 2 (Gate 2) வழியாகச் செல்லலாம்.

வயதானவர்கள், நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இளம் சிறார்  போன்றோர் அவர்களது நலம் கருதி வீட்டில் இருந்தே வழிபடலாம்.

கொவிட்-19 சூழல் காரணமாக இவ்வாண்டு புரட்டாசி உற்சவத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் தொடர்பில் பக்தர்களின் புரிந்துணர்வை ஆலய நிர்வாகம் கோருகிறது.

இவ்வாண்டு புரட்டாசி உற்சவத்தின் தொடர்பிலான கூடுதல் விவரங்களுக்கு:

www.heb.org.sg
www.sspt.org.sg
https://www.facebook.com/hinduendowmentsboard 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon