சிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19

1 mins read
9f5eda45-8e49-4e44-9264-c4fd01559c94
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 18) நண்பகல் நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,543 ஆகியுள்ளது.

கடந்த மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைவான கொவிட்-19 சம்பவங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில், உள்ளூர் சமூகத்தில் சிங்கப்பூரர் ஒருவர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்