தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்

1 mins read
a4f3472e-5138-4bd2-bdb0-e989b261ec2b
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூரில் இன்று நண்பகலில் 12.05 மணிவாக்கில் இப்படி சூரியனைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் தெரிந்தது.

வானில் மிக உயரத்தில் மெல்லிய மேகங்கள் காணப்படும்போது கண்ணைக் கவரும் இந்த வானியல் அற்புதம் நிகழும்.

அம்மேகங்கள் நீர்த்துளிகளுக்கு மாறாக சிறிய பனிக்கட்டிப் படிகங்களைக் கொண்டிருக்கும்போது, அவை மிகச் சிறிய முப்பட்டகங்களாகச் செயல்பட்டு, ஒளியை எதிரொளிக்கும்போது இப்படி சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்.

மூன்று வாரங்களுக்குமுன் மெர்லயன் பகுதியையொட்டி தெளிவற்ற ஒளிவட்டம் தெரிந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்