சிங்கப்பூரை நோக்கும் 'டெஸ்லா'; வேலைகளுக்கு விளம்பரம்

சிங்கப்பூரை நோக்கும் 'டெஸ்லா'; வேலைகளுக்கு விளம்பரம்

1 mins read
d26722df-f979-4a1e-8618-1e3140c508fe
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட வேலைகளுக்கு  அந்நிறுவனம் விளம்பரம் செய்திருப்பது அதைக் காட்டுவதாக இருக்கிறது. படம்: ஏஎஃப்பி -

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான 'டெஸ்லா', சிங்கப்பூரில் கால்பதிப்பதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட வேலைகளுக்கு அந்நிறுவனம் விளம்பரம் செய்திருப்பது அதைக் காட்டுவதாக இருக்கிறது.

'லிங்க்டுஇன்' சமூக ஊடகம் வழியாக 'உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை' என அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பான சில வேலை இடங்களுக்கு அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

இது பற்றி கருத்துரைக்க பெய்ஜிங்கில் உள்ள அந்த நிறுவனத்தின் பேராளர் மறுத்துவிட்டார்.

2040ஆம் ஆண்டிற்குள் புதைபடிம எரிபொருள்களால் இயங்கும் வாகனங்களை நிறுத்த சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாண்டு இறுதியில் அல்லது 2021 தொடக்கத்தில் டெஸ்லா கார்கள் இங்கு இறக்குமதி ஆகலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்