இந்தியாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் புதிய சம்பவங்கள் இல்லை

இந்தியாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் புதிய சம்பவங்கள் இல்லை

1 mins read
c94dfd67-c74f-4b98-9eb7-a47c51b2bfd6
படம்: சிஎம்ஜி -

சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 22) அறிவிக்கப்பட்ட 21 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாது ஒருவர் கடந்த 10ஆம் தேதி இந்தியாவிலிருந்து திரும்பியவர். அவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

நேற்று உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் கிருமித்தொற்று அறிவிக்கப்படவில்லை.

எஞ்சிய 20 கிருமித்தொற்று சம்பவங்கள் விடுதிகளில் தங்கியிருப்போர் தொடர்பிலானது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த இடங்களின் பட்டியலில் புதிதாக இடங்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை.

உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1 ஆக இருக்கிறது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 31.7 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 974,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்