கொவிட்-19: விதியை மீறிய வெளிநாட்டினர் இருவருக்கு நிரந்தர தடை

கொவிட்-19: விதியை மீறிய வெளிநாட்டினர் இருவருக்கு நிரந்தர தடை

1 mins read
b700fe07-b778-465c-b5d5-f1321684504f
ஆல்பிரட் ஜோன் வெலேசோ வாரிங் (இடது), டேனியல் ஒலலெகான் என்ற பிரிட்டனைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் இனிமேல் சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியாத அளவுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடு நடப்பில் இருந்தபோது ராபர்ட் கீ பகுதியில் ஒன்றுகூடிய இரண்டு பேரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

டேனியல் ஒலலெகான், 30, ஆல்பிரட் ஜோன் வெலேசோ வாரிங், 34, என்ற பிரிட்டனைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் இனிமேல் சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியாத அளவுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.

ராபர்ட் கீ பகுதியில் பலரும் கூடியிருந்ததைக் காட்டும் படங்கள் மே 16ஆம் தேதி சமூக ஊடகங்களில் வலம் வந்தன. அன்று லெமன்செலோ என்ற உணவகத்திற்கு அருகே உள்ள படிக்கட்டுகளில் சந்தித்து மதுபானம் அருந்தி பலரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களில் அந்த இருவரும் இடம்பெற்று இருந்தார்கள்.

குற்றம் செய்த மற்றவர்களுக்குக் கடந்த ஜூன் மாதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அனைவருக்கும் சிங்கப்பூரில் வேலை பார்க்கத் தடைவிதிக்கப்பட்டது. என்றாலும் அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதால் அவருக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படவில்லை.

கொவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக டேனியல் மற்றும் ஆல்ஃபிரட் இருவருக்கும் முறையே $8,500 மற்றும் $8,000 அபராதம் ஏற்கெனவே விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கிருமிப் பரவலைத் தடுக்க ஏப்ரல் 7 முதல் ஜூன்1 வரை கடும் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன.

குறிப்புச் சொற்கள்