வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கான நுழைவு அனுமதிப் புதுப்பிப்பு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

அடுத்த மாதத்­தில் இருந்து வெளி­நாட்­டுப் பதி­வெண் கொண்ட வாக­னங்­க­ளுக்­கான நுழைவு அனு­மதி இரு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை நீட்­டிக்­கப்­பட வேண்­டும்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கடந்த மார்ச் மாதத்­தில் இருந்து இதற்கு ஆறு மாத விலக்கு அளித்­தி­ருந்த நிலை­யில், இந்த அறி­விப்பு வெளி­யாகி இருக்­கிறது.

வரும் அக்­டோ­பர் 1ஆம் தேதி­யில் இருந்து, வெளி­நாட்­டுப் பதி­வெண்­ணு­டன் கூடிய கார், மோட்­டார்­சைக்­கிள் வைத்­தி­ருக்­கும் வாக­ன­மோட்­டி­கள் 14 நாள்­க­ளுக்கு ஒரு­முறை வாகன நுழைவு அனு­ம­திக் கட்­ட­னம் செலுத்த வேண்­டும் என ஆணை­யம் தெரி­வித்துள்ளது.

ஒரு­முறை புதுப்­பித்­தால் இரு வாரங்­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­கும் என்ற மார்ச் 18ஆம் தேதிக்கு முன்­பி­ருந்த நடை­முறை இனி தொடரும்.

சிங்­கப்­பூர் சாலை­களில் வழக்­க­நிலை திரும்­பு­வ­தற்­கான இன்­னோர் அறி­கு­றி­யாக இந்த அறி­விப்பு பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆறு மாத விலக்கு அறி­விப்­பிற்­கு­முன், தாங்­கள் தங்­கி­யி­ருக்­கும் காலத்தை நீட்­டிக்க விரும்­பி­னால் அதற்­காக வாக­ன­மோட்­டி­கள் ஆணை­யத்­தின் சின் மிங் அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று விண்­ணப்­பிக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆயி­னும், சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சிய ஊழி­யர்­கள் இங்­கேயே தங்­கி­யி­ருக்க உத­வும் வகை­யில் அவர்­க­ளுக்கு அந்த விதி­முறை­யைத் தளர்த்­தி­யது. பின்­னர், புதுப்­பிப்பு விண்­ணப்­ப­தா­ரர்­கள் தனது அலு­வ­ல­கத்­தில் திரண்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக மற்ற வாக­ன­மோட்­டி­க­ளுக்­கும் அந்­தத் தளர்வு நீட்­டிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­குள் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யும் வாக­னங்­கள் உட்­பட வெளி­நாட்­டுப் பதி­வெண் கொண்ட அனைத்து வாக­னங்­க­ளுக்­கும் இரு வார செல்­லத்­தக்க கால விதி­முறை இனி பொருந்­தும்.

அக்­டோ­பர் 15ஆம் தேதி­யில் இருந்து, காலா­வ­தி­யான வாகன நுழைவு அனு­மதி வைத்­தி­ருப்­போருக்கு அப­ரா­தம் விதிக்கும் நடை­முறை தொடங்­கும்.

வெளி­நாட்­டுப் பதி­வெண் கொண்ட வாக­ன­மோட்­டி­கள் தங்­க­ளது வாக­னங்­க­ளுக்­கா­கச் செலுத்த வேண்­டிய மொத்த தொகை எவ்­வ­ளவு என்­பதை https://www.onemotoring.com.sg/content/onemotoring/home.html என்ற இணை­யப்­பக்­கத்­தில் இடம்­பெற்­றுள்ள இணை­யக் கணிப்­பான் மூலம் கணக்­கி­ட­லாம்.

‘ஏஎக்ஸ்­எஸ்’ இயந்­தி­ரங்­கள் அல்­லது உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச் சாவ­டி­க­ளுக்கு அருகே அமைந்­துள்ள ஆணை­யத்­தின் 24 மணி­நேர ‘ஆட்­டோ­பாஸ் அட்டை’ பணம் நிரப்­பும் சாவ­டி­கள் மூல­மா­க­வும் அவர்­கள் பணம் செலுத்­த­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!