சுடச் சுடச் செய்திகள்

போதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது

தீவு முழு­வ­தும் இரு வாரங்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர சோத­னை­யின் பய­னாக சந்­தே­கத்­துக்­கு­ரிய 162 போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட்டு உள்­ள­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) தெரி­வித்­தது.

பிடி­பட்­ட­வர்­களில் 14 வயது சிறு­மி­யும் அடங்­கு­வார் என்­றும் போதைப்­பொ­ருள் புழங்­கிய சந்­தே­கத்­தின் பேரில் அவர் கைது செய்­யப்­பட்­டார் என்­றும் சிஎன்பி நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. இம்­மா­தம் 14ஆம் தேதி தொடங்கி நேற்­று­டன் முடி­வந்த சோதனை நட­வ­டிக்­கை­

க­ளின்­போது $260,500 மதிப்­புள்ள போதைப்­பொ­ருட்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். ஒரு சம்­ப­வத்­தில், போதைப்­பொ­ருள் கடத்­தல் சந்­தே­கத்­தின் பேரில் கடந்த 14ஆம் தேதி தியோங் பாரு வட்­டா­ரத்­தில் உள்ள எங் ஹூன் ஸ்தி­ரீட் அருகே 38 வயது ஆட­வர் பிடி­பட்­டார்.

விசா­ர­ணை­யைத் தொடர்ந்து அதே வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீட்­டுக்கு அவர் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் அங்கு 30 வயது மாது ஒரு­வர் பிடி­பட்­ட­தா­கவும் சிஎன்பி கூறி­யது.

ஏரா­ள­மான போதைப்­பொ­ருட்­க­ளு­டன் சுமார் $20,000 ரொக்­க­மும் அந்த வீட்­டில் இருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தாக அது தெரி­வித்­தது. மற்­றொரு சம்­ப­வத்­தில் பீச் ரோடு வட்­டா­ரத்­தில் உள்ள ஹோட்­டல் ஒன்­றின் அறை­களில் பெண் உள்­ளிட்ட ஐவர் சிக்­கி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon