சிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19

1 mins read
b8c94295-712e-47d8-9c1d-bd2acfd3ead4
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 26) நண்பகல் நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,685 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

நேற்று 11 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

இந்தியா, பிலிப்பீன்சிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு கொண்ட இருவருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

எஞ்சிய 9 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 32.3 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 990,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்