கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் நீ ஆன் சிட்டி

ஆர்ச்சர்டு ரோட்டில் இருக்கும் நீ ஆன் சிட்டி, சாங்கி விமான நிலைய முனையம் 1ல் இருக்கும் ஆர்ச்சிஸ் உணவங்காடி நிலையம், அலெக்சாண்ட்ரா வில்லேஜ் ஃபூட் சென்டர் போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்) சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 21) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஐஎம்எம், பூகிஸ் ஜங்ஷன், பூகிஸ்+ ஆகிய இடங்களும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!