இந்தியா, இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய 9 பேருக்கு கொவிட்-19

இந்தியா, இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய 9 பேருக்கு கொவிட்-19

1 mins read
cbec979b-4ba5-4a12-97e4-64214dec8bb3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 29) 27 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

அவர்களில் ஒருவர் உள்ளூர் சமூகத்தில் வசிக்கும் மலேசிய ஊழியர். அவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

ஒரு சிங்கப்பூரர், ஒரு வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர் என இருவர் இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

நிரந்தரவாசிகள் ஐவர், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஒருவர் ஆகியோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

மற்றவர்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 34 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்