மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்படும் ஹாவ் பார் வில்லா

மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்படும் ஹாவ் பார் வில்லா

1 mins read
adf90ce7-919a-43f3-a4fc-caaa3ed7190a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாசிர் பாஞ்சாங் சாலையில் அமைந்திருக்கும் பிரபல கருப்பொருள் பூங்காவான ஹாவ் பார் வில்லா மேம்பாட்டுப் பணிகளுக்காக அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை மூடப்படுகிறது.

இவ்விவரம் அந்தப் பூங்காவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தகைய மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறும் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆயினும், சுற்றுப்பயணிகளுக்குப் புதிய அனுபவங்களை வழங்கும் வகையில் பூங்கா மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் வழியாக ஹா பார் வில்லா தெரிவித்துள்ளது.

சீனப் புராணங்களை, நாட்டுப்புறவியலை எடுத்துக்காட்டும் கிட்டத்தட்ட 1,000 சிற்பங்கள் இடம் பெற்றிருப்பது அந்தப் பூங்காவின் சிறப்பம்சம்.

குறிப்புச் சொற்கள்