கொவிட்-19 சூழலில் விமானப் பயண அனுபவத்தைப் பெற எஸ்ஐஏ நிறுவனத்தின் புதிய நடவடிக்கைகள்: கட்டண விவரம் அறிவிப்பு

கொரோனா தொற்று சூழல் காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை பெரிதும் நசிவைச் சந்தித்துள்ள வேளையில், உள்ளூர்வாசிகளுக்கு வித்தியாசமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் விமானப் பயணச் சூழலில் உணவு உட்கொள்வது உட்பட 3 நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆகப் பெரிய ஏர்பஸ் A-380 விமானத்தில் எகானமி பிரிவு அறையில் மூன்று மணி நேரம் செலவழித்து மதிய உணவு உட்கொள்ள $50 செலவாகும்.

இன்னும் மேம்பட்ட அனுபவம் தேவைப்பட்டால், முதல் வகுப்பு சிறப்பு அறைகளில் மதிய உணவு உட்கொள்ள $600 கட்டணம்.

இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் பயிற்சி வளாகத்தைச் சுற்றிப்பார்க்க 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு $15, பெரியவர்களுக்கு $30 கட்டணம்.விமான பாவனை அனுபவம் பெற விரும்பினால் மூவருக்கு $500 என்ற விதத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு கொண்டுவந்து கொடுக்கும் சேவையும் உண்டு. வர்த்தகப் பிரிவு உணவுக்கு $288. முதல் வகுப்பு உணவுக்கு $448. பிரபல சமையல் கலை வல்லுநர்களைக் கொண்டு இந்த உணவுப் பட்டியல், உணவு தயாரிக்கப்படுவதாக மக்கான்சூத்ரா நிறுவனத்தின் நிறுவனர் கே.எஃப். சீத்தோ குறிப்பிட்டார்.

இந்த விலைப் பட்டியலில் பொருள், சேவை வரி சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!