டாக்சி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாதசாரிகள்; இளம்பெண் மருத்துவமனையில்

டாக்சி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாதசாரிகள்; இளம்பெண் மருத்துவமனையில்

1 mins read
1c5e5475-7e38-456f-b4a2-8ef7f1f0df75
படம்: SCREENGRAB FROM ROADS.SG/FACEBOOK -

பாய லேபார் ரோடு, கேலாங் ரோடு சந்திப்பில் நேற்று பிற்பகல் வேளையில், சாலையைக் கடந்து சென்ற 17 வயது பெண், 24 வயது ஆடவர் ஆகிய பாதசாரிகள் மீது டாக்சி மோதியது.

பாதசாரிகள் இருவரும் அவர்களது உடைமைகளுடன் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த விபத்தில் சிக்கிய அந்தப் பெண் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தின் தொடர்பில் எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் சில்வர்கேப் டாக்சி ஒன்று, சாலையைக் கடந்துகொண்டிருந்த போது மோதியதைக் காட்டியது. அப்போது போக்குவரத்து சைகையில் சிவப்பு நிற மனிதன் இருந்ததைக் காண முடிந்தது.

சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 3.23 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்