சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19; நால்வர் மட்டுமே விடுதிவாசிகள்

சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19; நால்வர் மட்டுமே விடுதிவாசிகள்

1 mins read
77389ce0-29f0-4596-9fd9-a465d0f555f2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 4) நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,812 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அறுவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் நேற்று (அக்டோபர் 3) அறிவிக்கப்பட்ட 6 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்தில் பதிவானது.

கடும் சுவாசப் பிரச்சினைகள் கொண்டுள்ள 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு செய்யப்படும் பரிசோதனைகளில் அந்த நபருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; அவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

அவரது குடும்பத்தாருக்கு 'சீரலாஜிகல்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து இந்த நபருக்கு கிருமி தொற்றியதா என்பது பற்றி ஆராயப்படும்.

ரிவர்வேல் பிளாசாவில் இருக்கும் பார்பர் பாயின்ட், லோயாங் லேனில் இருக்கும் 64+4 உணவங்காடி நிலையம் போன்ற இடங்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 35 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்