1,600 வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி மானியம் வழங்கப்பட்டது

கடந்த ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1,600 வெளிநாட்டு மாணவர்களுக்கு சிங்கப்பூர் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் பயில மானியம் வழங்கப்பட்டதாக கலவி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இது ஓராண்டில் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பத்து விழுக்காட்டிற்கும் குறைவு எனக் கூறப்பட்டது.

கல்வி அமைச்சின் ‘கல்வி மானியத் திட்டத்தின்’ மூலம் பயன்பெறும் வெளிநாட்டு மாணவர்கள், பட்டம் பெற்ற பிறகு ஏதேனும் ஒரு சிங்கப்பூர் நிறுவனத்தில் கட்டாயம் மூன்றாண்டுகள் பணிபுரிய வேண்டும்.

இப்போதைய பொருளியல் சூழலில், அண்மைய பட்டதாரிகள் வேலை தேடிக்கொள்ள சிரமப்படுவதை அமைச்சர் வோங் ஒத்துக்கொண்டார்.

உள்ளூர் மாணவர்கள் வேலை தேடிக்கொள்ள ஆதரவு வழங்குவதில் கல்வி அமைச்சு முன்னுரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதே வேளையில் ‘கல்வி மானியம்’ பெற்ற வெளிநாட்டு மாணவர்களும் நியாயமாக நடத்தப்படுவர் என்றும் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!