பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின்பேரில் தடுத்துவைக்கப்பட்டவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு பதிவு

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின்பேரில் தடுத்துவைக்கப்பட்டவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு பதிவு

1 mins read
3e0a046b-7bb2-42e6-80ad-2f3ce397e7bd
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுல்ஃபிகார் முகம்மது ஷரீப் என்பவர், இணையத்தில் தீவிரவாத மனப்போக்கு சித்தாந்தங்களைப் பரப்பியது, இதர இரண்டு பேரை அத்தகைய சித்தாந்தம் மூலம் வசப்படுத்த முயற்சி செய்தது ஆகியவற்றுக்காக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2016ல் தடுத்து வைக்கப்பட்டவர்.

சுல்ஃபிகார் முகம்மது சிங்கப்பூர் கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தார் என்றும் அதில் பொய் தகவலை தெரிவித்தார் என்றும் அவர் மீது இன்று (அக்டோபர் 8) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர் அக்டோபர் 22ல் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுல்ஃபிகார் முகம்மது, 49, ஓர் ஆஸ்திரேலியர். ஆனால் அவர் சிங்கப்பூர் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டாரா என்பது தெரியவில்லை.

அவர் 2013ல் இணையம் வழியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, தான் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றவர் அல்ல என்று குறிப்பிட்டு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்