டிக்சன் இயோ என்ற சிங்கப்பூரர் அமெரிக்காவில் சீனாவுக்காக வேவு பார்த்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் அந்த நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்க இருப்பதாகத் தெரிவித்தது.
டிக்சன் இயோ அதிகாரிகளுடன் ஒத்துழைத்து இருக்கிறார் என்பதால் அவருக்கு 16 மாதச் சிறைத்தண்டனை விதிக்கலாம் என்று அரசினர் தரப்பு கேட்டுக்கொண்டது.
அதே வேளையில், இயோவுக்கு மேலும் சிறைத் தண்டனை தேவையில்லை என்றும் அவர் இதுவரை சிறையில் இருந்ததே போதும் என்றும் தற்காப்புத் தரப்பு வாதிட்டது.
இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஏறக்குறைய 13 மாதங்கள் ஆகின்றன.
இயோ சென்ற ஆண்டு நவம்பரில் கைதானார். அது முதல் அவர் வாஷிங்டன் டிசியில் சிறையில் இருந்து வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து இயோ வெளி யேற்றப்படுவார். அதுவரை அவர் குடிநுழைவுத்துறையின் பொறுப்பில் கொஞ்சம் கூடுதல் காலம் இருக்க நேரிடும் என்று தெரிவதாக இயோவின் வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார்.

