ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் இருந்து டைனோசரை ரசித்தபடி சாங்கி விமான நிலையம் செல்ல புதிய சைக்கிள் பாதை

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் இருந்து டைனோசரை ரசித்தபடி சாங்கி விமான நிலையம் செல்ல புதிய சைக்கிள் பாதை

1 mins read
2c97832d-3a9b-493a-848a-9cbc5a309acb
போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இன்று இந்தப் பாதையை 'சாங்கி ஜூராசிக் மைல்' என்ற இடத்தில் திறந்துவைத்தார். முன்னதாக அவர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் இருந்து அங்கு சைக்கிளோட்டிச் சென்றார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சாங்கி விமான நிலையத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கையும் இணைக்கும் புதிய பாதை இப்போது திறக்கப்பட்டு உள்ளது. அந்தப் பாதை வழியாக சைக்கிள் ஓட்டிச் செல்லலாம். மக்கள் மெது ஓட்டத்திலும் ஈடுபடலாம்.

அந்த 3.5 கி.மீ. பாதை நெடுகிலும் டைனோசர் விலங்கைச் சித்திரிக்கும் 20க்கும் அதிக உருவங்கள் பல பாணிகளில் அமைக்கப்பட்டு உள்ளன.

புதிய பாதை நெடுகிலும் ஓய்வு இடம், சைக்கிள் வாடகை நிலையம், காசு கொடுத்து குளிக்கும் அறை, புதிய காப்பி கடை, சுத்தப்படுத்தும் கூடம் ஆகியவையும் அமைந்துள்ளன.

சிங்கப்பூரர்கள் விமான நிலையத்துக்குச் செல்ல மாற்று வழியாகவும் புதிய பொழுதுபோக்கு வசதியாகவும் இந்தப் புதிய பாதை திகழும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

சிங்கப்பூர் சுற்றுலா கழகம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவற்றின் ஆதரவுடன் மூன்று ஆண்டுகளில் இந்தப் புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

டைனோசர் உருவங்களுடன் கூடிய சாங்கி ஜூராசிக் மைல் என்ற 1 கி.மீ. பாதைக்குள் செல்ல கட்டணம் இல்லை.

ஆனால் பாதுகாப்பு இடைவெளி அவசியம் என்பதால் வெள்ளிக்கிழமைகள் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் வரை வாரயிறுதி நாட்களில் முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்