சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொவிட்-19; அவர்களில் விடுதிவாசிகள் இல்லை

சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொவிட்-19; அவர்களில் விடுதிவாசிகள் இல்லை

1 mins read
efa33a2c-95f4-40cd-bdb6-bd584aa8fcc8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 13) நண்பகல் நிலவரப்படி புதிதாக நால்வருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,884 ஆகியுள்ளது.

இன்று பதிவான கிருமித்தொற்று சம்பவங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள் தொடர்பானது எனவும் உள்ளூர் சமூகத்திலும் விடுதிகளிலும் எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு இன்றுதான் விடுதிகளில் புதிதாக கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்