முஸ்தஃபா செண்டர் உரிமையாளர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

தமது தந்தை, வளர்ப்­புத் தாயார் மற்­றும் வளர்ப்­புத் தாயின் பிள்­ளை­கள் ஆகி­யோரை ஏமாற்­றி முஸ்­தஃபா செண்­டர் உரி­மை­யா­ளர் முஸ்­தாக் அக­மது தமது மனைவி, பிள்­ளை­க­ளோடு செல்­வ­செ­ழிப்­பு­டன் இருப்­ப­தாக அவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

34 நாட்­க­ளுக்கு நீடிக்­க­வுள்ள இவ்­வ­ழக்கு விசா­ரணை, நேற்று தொடங்­கி­ய­போது திரு முஸ்­தாக் மீதும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் மீதும் இக்­குற்­றச்­சாட்­டு­கள் கூறப்­பட்­டன.

அவர்­கள் மீது வழக்கு தொடுத்­த­வர்­கள் திரு முஸ்­தாக்­கின் வளர்ப்­புத் தாயார் மற்­றும் அவ­ரின் ஐந்து பிள்­ளை­கள்.

பிர­பல முஸ்­தஃபா செண்­ட­ருக்­குப் பின்­ன­ணி­யில் இயங்­கும் ‘முகம்­மது முஸ்­தஃபா அண்ட் சம்­சு­தின் கம்­பெனி’யைக் கலைத்­து­வி­டு­மாறு ஆணை­யிட உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தோ­ரின் சார்­பில் திரு அயாஸ் அக­மது என்­ப­வர் கோரி­யுள்­ளார்.

திரு முஸ்­தாக்­கின் தவ­று­க­ளால் பங்­கு­தா­ரர்­க­ளின் உற­வில் ‘மீள­முடி­யாத முறிவு’ ஏற்­பட்­டுள்­ளதே வழக்கு தொடுத்த தரப்­பின் வாத­மா­கும்.

இவ்­வாறு வழக்கு தொடுத்­தோ­ரைப் பிர­தி­நி­திக்­கும் மூத்த வழக்­க­றி­ஞர் தவீந்­தர் சிங், திரு முஸ்­தாக்­கின் செயல்­க­ள் குறித்து, “நிறு­வ­னத்­தைத் தமக்கு சொந்­த­மாக கருதி, மற்ற பங்­கு­தா­ரர்­கள் மற்­றும் இயக்­கு­நர்­க­ளின் உத­வி­யு­டன் தமது பத­வி­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி, அவ­ருக்­குச் சொந்­த­மில்­லாத பங்­கு­க­ளை­யும் பணத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார்,” என்று கூறி­னார்.

தமது தந்­தை­யான திரு முகம்­மது முஸ்­தஃபா, 1995ஆம் ஆண்­டில் நிறு­வ­னத்­தில் கொண்­டி­ருந்த பங்­கு­களை திரு முஸ்­தாக் ‘ரக­சி­ய­மாக’ பலங்­கு­றைய வைத்­த­தா­க­வும் அவர் குற்­றம் சாட்­டி­னார். 2001ஆம் ஆண்­டில் திரு முகம்­மது முஸ்­தஃபா இறந்­ததை அடுத்து, அவ­ரது பங்கு­க­ளின் பலத்தை திரு முஸ்­தாக் இன்­னும் குறைத்து 14.89% ஆக்­கி­ய­தா­க­வும் தமது சொந்த குடும்­பத்­தின் பங்­கு­க­ளின் பலத்தை 69.99% ஆக உயர்த்­தி­ய­தா­க­வும் திரு சிங் தெரி­வித்­தார்.

மேலும் 2000க்கும் 2013க்கும் இடைப்­பட்ட காலத்­தில் சரா­ச­ரி­யாக ஆண்­டுக்கு தலா $9.6 மில்­லி­யன் லாபம் வந்­த­போ­தும் ஈவுத்­தொகை எது­வும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் திரு முஸ்­தாக் ஆண்­டுக்­குத் தலா $3 மில்­லி­யன் முதல் $5 மில்­லி­யன் வரை­யி­லான இயக்­கு­நர்க் கட்­ட­ணத்தை ஓர் ஆண்­டில் பெற்­ற­து­டன், இல்­லத்­த­ர­சி­யான அவ­ரின் மனைவி இஷ்­ரத்­துக்கு ஆண்­டுக்கு $200,000 முதல் $400,000 வரையும் கிடைத்­தது.

2013ஆம் ஆண்­டுக்­கும் 2016ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் தமது கட்­சிக்­கா­ரர்­கள், நடந்து வந்த இத்­த­வ­று­கள் குறித்து அறிந்து­கொண்­ட­னர் என்­றும் அவர்­கள் கேள்வி கேட்­கத் தொடங்­கி­ய­தும் 14 ஆண்­டு­களில் கட்­டாத ஈவுத்­தொ­கையை நிறு­வ­னம் மூலம் திரு முஸ்­தாக் கட்ட வைத்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தம்­மைக் கேள்வி கேட்­கா­மல் இருக்க திரு முஸ்­தாக் தந்த சலுகை இது என்று திரு சிங் வாதிட்­டார். இருப்­பி­னும் 2017ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் வழக்கு தொடுக்­கப்­பட்­டதை அடுத்து இந்த ஈவுத்­தொகை மறு மாதம் முதல் வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

நிறு­வ­னத்­தி­லி­ருந்து பணத்­தைக் கையா­டும் மோசடி பரி­வர்த்­த­னை­களை­யும் திரு முஸ்­தாக் செய்­துள்­ள­தாக திரு சிங் குற்­றம் சாட்­டி­னார்.

திரு முஸ்­த­ஃபா­வின் வியா­பார பங்­காளி சம்­சு­தின் மொக்­தார் அக­ம­து­வின் இரண்டு மகன்­களும் இதே போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளைக் கூறும் வழக்­கைத் தொடுத்­துள்­ள­னர்.

தெரு­வோ­ரக் கடை­யாக இருந்­ததை இன்று பெரு­ம­ளவு வர்த்­த­க­மாக மாற்­றி­யது தன்­னு­டைய 50 ஆண்டு உழைப்­பும் அர்ப்­ப­ணிப்­புமே என்று தம் தரப்­பில் தற்­காத்­துப் பேசி­னார் திரு முஸ்­தாக்.

வியா­பா­ரத்­தின் ஒரே உரி­மை­யா­ளர் திரு முஸ்­தாக் என்று அவ­ரது வழக்­க­றி­ஞர் எல்­வின் இயோ வாதிட்­டார். இத­னால் அனைத்து முடி­வு­க­ளை­யும் அவரே எடுத்து வந்­தார் என்­றும் கூறப்­பட்­டது.

பல ஆண்­டு­க­ளாக திரு முஸ்­தாக்­கின் கரு­ணை­யி­லும் பெருந்­தன்­மை­யி­லும் பல­ன­டைந்த கூட்­டம், இப்­போது ‘சாத­மிட்ட கையைக் கடிப்­ப­தாக நடந்­து­கொள்­வது’ வருத்­தத்தை அளிப்­ப­தாக திரு இயோ கூறி­னார்.

திரு முஸ்­த­ஃபா­வும் திரு சம்­சு­தி­னும் இறந்து பல ஆண்­டு­கள் ஆகிய பின்­னரே அவர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள் மேலும் அதி­க பணம் வேண்­டும் எனக் கோரி ‘சுய உரிமை தொடர்­பான தவ­றான புரிந்­து­ணர்­வு­டன்’ வந்­துள்­ள­தா­க­வும் அவர் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!