அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக புகாரளிக்க பார்தி லியானி முடிவு

அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக புகாரளிக்க பார்தி லியானி முடிவு

1 mins read
65c099ff-383a-4658-8b1b-319412bfce27
தமது வழக்கறிஞர் பால்சந்தானியுடன் திருவாட்டி பார்தி லியானி (வலது). கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்னாள் பணிப்பெண்ணான பார்தி லியானி, 46, தமக்கு எதிராக வாதாடிய இரு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக ஒழுங்கின்மை வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளார்.

பிரபல வர்த்தகர் லியூ மன் லியோங்கின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த பார்தி லியானி மீது முதலாளியின் வீட்டிலிருந்து $34,000 பெறுமானமுள்ள பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வழக்கில் தமக்கு எதிராக வாதிட்ட அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மீதுதான் அவர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

மேல் முறையீட்டில் திருவாட்டி பார்தி லியானி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்