வரி செலுத்தப்படாத 2,600 பெட்டி சிகரெட்டுகள்: 10 பேர் கைது

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பான பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருந்த எட்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என பத்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் 23 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் இம்மாதம் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஏழு வெவ்வேறு நடவடிக்கைகளில் பிடிபட்டனர் என்றும் சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.

அவர்களிடமிருந்து 2,600க்கு மேற்பட்ட பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அதற்கான வரி மதிப்பு $293,700 என்றும் தெரிவிக் கப்பட்டது.

கிங் ஜார்ஜஸ் அவென்யூ, சிராங்கூன் நார்த் அவென்யூ 4, காங் சிங் ரோடு, யூனோஸ் தொழிற்பேட்டை, ரியால்டி பூங்கா ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது, விநியோகிப்பது, பதுக்கி வைப்பது, தன் வசம் வைத்திருப்பது, அதன் தொடர்பான பரிவர்த்தனையில் ஈடுபடுவது ஆகியவை சுங்கத்துறை சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றின்படி கடுமையான குற்றங்கள் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!