தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரினா நீர்த்தேக்கத்திலிருந்து ஆடவர் சடலம் மீட்பு

1 mins read
5b890562-88c8-4fef-9b2b-3b74510c8997
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்கப்பூரின் புரோமோன்டரிக்கு அருகில் மரினா நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (அக்டோபர் 19) காலை மீட்கப்பட்ட ஆடவர் இறந்துவிட்டதை சம்பவ இடத்திலேயே துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

எண் 11 மரினா பொலிவார்டுக்கு அருகில் உதவி நாடி காலை 8.44 மணிக்கு அழைப்பு வந்ததாக போலிஸ் தெரிவித்தது.

காலை 8.50 மணியளவில் சம்பவ இடத்துக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சென்றபோது அங்கு நீரில் யாரையும் காணவில்லை.

"தண்ணீருக்குள் தேடுவதற்காக பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரையிலிருந்து சுமார் 2 மீட்டர் தூரத்தில் ஓர் ஆடவரை அவர்கள் கண்டுபிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்," என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்