சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 19) நண்பகல் நிலவரப்படி புதிதாக நால்வருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,915 ஆகியுள்ளது.

உள்ளூர் சமூகத்திலோ விடுதியிலோ யாருக்கும் புதிதாக கிருமித்தொற்று பதிவாகவில்லை.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வரும் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். 

நேற்று பதிவான 2 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்திலும் மற்றொன்று ஊழியர் தங்கும் விடுதியிலும் பதிவானவை.

உள்ளூர் சமூகத்தில், தொழில்நுட்பராகப் பணியாற்றும் 40 வயது பங்ளாதேஷ் ஊழியர், கிருமித்தொற்று அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு பணிக்குச் செல்லவில்லை. சீரம் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு முன்பு கிருமித்தொற்று இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கமான பரிசோதனையில் விடுதிவாசிக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்ட ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று பதிவானது. 

பிலிப்பீன்சிலிருந்து வந்த 40, 27 வயதுகளில் இருக்கும் இரு பெண்கள், கிரீசிலிருந்து வந்த 32 வயது ஆடவர், பிரான்சிலிருந்து வந்த 48 வயது ஆடவர் ஆகியோர் வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரிபவர்கள்.

மாணவர் அனுமதி அட்டையில் குவாட்டமாலாவிலிருந்து வந்த 17 வயது மாணவனுக்கும் நேற்று கிருமித்தொற்று பதிவானது. 

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்ட ஐவருக்கு நேற்று கிருமித்தொற்று பதிவானது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 39.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.11 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon