காருக்குள் வெடிபொருள் உள்ளது எனக் கூறியவர் மீது குற்றச்சாட்டு

காருக்குள் வெடிபொருள் உள்ளது எனக் கூறியவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
baf47199-d0b0-4ff6-bf0a-74822b3cb9e9
-

பாய லேபார் ஆகாயப் படைப் பயிற்சி முகாமுக்கு அருகில் உள்ள மருத்துவ நிலையத்துக்கு காரை ஓட்டிச் சென்று தமது காருக்குள் வெடிபொருள் இருப்பதாகக் கூறியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று ஓல்டு ஏர்போர்ட் சாலையில் உள்ள சிங்கப்பூர் ஏரோமெடிக்கல் நிலையத்துக்கு கார் ஓட்டிச் சென்ற ஸாயித் ஹஷிம் சிராஜ், அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தமது காருக்குள் வெடிபொருள் இருப்பதாகக் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ் சிங்கப்பூரரான 30 வயது ஸாயித் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவரது காருக்குள் வெடிபொருள் இருந்ததா என்பது குறித்தும் ஸாயித்தின் இந்தச் செயலுக்காக காரணம் குறித்தும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

மனநலப் பரிசோதனைக்காக ஸாயித் மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்